உலக நாடுகளில் ஆராய்ச்சித் துறை வேலை வாய்ப்புகள் (அறிவியல் துறை)!

உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அயல்நாட்டினருக்கான பலத்தரப்பட்ட ஆராய்ச்சித்துறை பணி வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதனை எப்படி அணுகுவது, என்னென்ன திறன் மற்றும் தேர்ச்சி பெற்றிருப்பது என பலரது கேள்விகளுக்கு முடிந்த அளவிற்கு தகவல்களைத் திரட்டியுள்ளேன். முதற்கட்டமாக, அறிவியல் துறையின் வேலைவாய்ப்புகள் குறித்தான தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்! முனைவர் பட்டத்திற்கான ஆய்வு என்பது ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்புப் போன்றதுதான். மாதாந்திர ஊதியமும் சில பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மாணாக்கருக்கு பாடம் எடுக்க வேண்டியதாகவும் கூட இருக்கும். எவ்வளவு ஊதியம் பெற... Continue Reading →

சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்நிலைப் படிப்பிற்கான வழிகாட்டல்

சுவீடன் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பொறியியல் அல்லது இளநிலை பொறியியல் கல்வியில் சேர முதலில் எந்தப் பல்கலைகழகங்களில் எந்தத் துறை சிறந்தது என அறிந்துக்கொள்ளுதல் நலம். அதேப்போல, உலகத் தர வரிசைகளில் எத்தகைய தர நிலையில் அப்பல்கலைக்கழகங்கம் இடம் வகித்துள்ளன என்பதனையும் அறிந்துக்கொள்ள வேண்டும். கல்விக்கட்டணமாக அரையாண்டிற்கு ஒருமுறை கட்ட வேண்டியத் தொகை 5, 50,000 ரூபாய் வரை ஆகும். அதேபோல, நுழைவுரிமை (visa) விண்ணப்பம் சமர்பிக்கும் பொழுதே,  இரண்டாண்டிற்கான ஒட்டுமொத்த சராசரி வாழ்க்கைச் செலவான... Continue Reading →

தாய்மொழிக் கல்வியும் பன்மொழிக் கல்வியும் – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநாவின் வழிகாட்டல்கள்!

எந்தவொரு நாடும், அதன் கல்வியின் மூலம் மட்டுமே கலை, பண்பாடு, வரலாறு அதன் ஒருங்கிணைப்பிலான ’தேசம்’ என்னும் கோட்பாட்டையும், அதன் அரசியலையும் தனித்த ’இறையாண்மை’யையும் நிலைநிறுத்த முடியும். இதனை ஐரோப்பிய நாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதாலேதான் தத்தமது தாய்மொழியினைக் கொண்டே பயிற்றுவிக்கிறது எனலாம். தாய்மொழிவழியே பிற மொழிக் கல்விப் பிரகடனம்: பல மொழி மக்கள் செறிந்து வாழும் நிலப்பகுதிகளில், அந்தந்த நிலத்தின் ஆதிக்க மொழி அல்லது 'தேசிய', 'அலுவல்' மொழி கல்வி மொழியாக இருக்கும் நிலையில், சிறுபான்மை... Continue Reading →

அமைப்பாய்த் திரள்வோம் – தமிழ்த் தேசிய நோக்கில்!

(முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் புத்தகத்தை முன்னிறுத்திய பார்வை) சமூகம், அரசியல், நிர்வாகம், மேலாண்மை, குடும்பம் என எவ்வித அமைப்புகளுக்கும் அவை வெற்றிகரமாகவும் கட்டுக்கோப்பாகவும் இயங்க அதற்கென சில பொதுவான சூத்திரங்களை ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகம் வழியே நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அதேவேளை, ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தை தமிழ்த்தேசியக் கருத்தியலின் பார்வையில் புரிந்துக்கொள்ளவும் முடியும். தமிழ்த்தேசியம்: தமிழர் தேசத்தின் குடிகளுக்கான பாதுகாப்பு, வாழ்வியல் மேம்பாடு, மொழியின் வளர்ச்சி, நிலத்தின் பாதுகாப்பு, தேசத்தினுள் இருக்கும் குடிகளின் ஏற்றத் தாழ்வற்ற... Continue Reading →

தமிழர் கடலும் தமிழீழ அரசியலும் – ராஜபக்சேக்களின் போக்கும் நம் வருங்கால இலக்கும்!

இலங்கைத் தீவின் சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சியின் தலைமைக்கு சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் வருகையினைத் தொடர்ந்து, தமிழர் ’தேசம்’ தங்களின் அரசியல் பாதை பயணிக்க வேண்டிய திசை குறித்தான விவாதத்தினைத் தொடங்கும் முன்னரே, இந்திய ஒன்றியத்தினதும் சிங்களத் தரப்பினதும் சந்திப்புகளும் காய் நகர்த்தலும் பெருவீச்சில் செயல்படத் தொடங்கிவிட்டன. மறுபுறம், எவ்வித அரசியல் கணக்கீடுகளும் இன்றி, ராஜபக்சேக்கள் சீனாவின் சார்பானவர்கள், ஆதலால், இந்தியா தமிழர்கள் பக்கம் தடம் மாறுவர் என பழைய பல்லவிகள் ’சமரசவாதிகளால்’ மீண்டும் வேர்விடத்... Continue Reading →

தாய்மொழிக் கல்வி – தமிழ் மொழியின் பல்லாயிரக் கால வரலாற்றுப் பார்வை

(இக்கட்டுரை, மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் 2004இல் எழுதிய ”தமிழ் வழிக் கல்வி கானல் நீரா? ” என்னும் நூலைத் தழுவி, அதில் உள்ளத் தகவல்களை உள்ளடக்கி நிகழ்கால அரசியல், கல்வி நிலை ஒப்பீடுகளோடு எழுதப்பட்டது) உள்ளடக்கம்: நிகழ்கால ஆங்கில மோகம் களப்பிரர் முதல் பல்லவர் கால கல்வி மொழி பிற்காலச் சோழர்களின் எழுச்சியும் கல்வி மொழிச் சிக்கலும் விஜயநகர, மராத்திய, முகலாயர்களின் அரசுகளும் மொழிக்கலவையும் பண்பாட்டுக் கலவையும் கிருத்துவ சபைகளின் பள்ளிகளில் தமிழ் தாமஸ் மன்றோ... Continue Reading →

தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் – உலகப்பார்வை

(அந்திமழை மாத இதழுக்கு எழுதியக் கட்டுரை - மே 2019) இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புகளும் வாக்குப் பதிவிற்கு பிந்தைய கணிப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. கடந்த 10-20 ஆண்டுகளிலேயே இணைய வசிதிகள் பெருகியதன் விளைவில், சமூக ஊடகங்கள் அவரவர் கைகளில் எந்நேரமும் தவழத் தொடங்கியப் பிறகு, தேர்தலுக்கு முன்பே நம் மக்கள் மீது பல்வேறு சிந்தனை ஊடுறுவல்களும் சிந்தனை மடைமாற்றங்களும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இது போதாதென்று, தனியார்... Continue Reading →

போக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே

(பூவுலகு ஏப்ரல் 2019 மாத இதழுக்காக எழுதப்பட்டது) உலக நாடுகளுக்கு நோர்வே முன்மாதிரியாக திகழ்கிறது எனச் சொன்னால் மிகையில்லை! போக்குவரத்தினால் உண்டாகும் காற்று மாசைக் குறைக்க நோர்வே எடுத்துவரும் முயற்சியை அனைவரும் உற்றுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இவைகள் குறித்த பார்வையே இக்கட்டுரை! இக்கட்டுரையைப் பொறுத்தவரை தொழிற்நுட்ப விளக்கங்கள் குறைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் மாசில்லா போக்குவரத்துக்கள் பற்றின செய்திகளை உள்ளடக்கியே எழுதப்பட்டிருக்கிறது. மார்ச் 2019ன் கணக்கின் படி, நோர்வே நாட்டில் விற்பனையான மகிழுந்துகளில் 58% மின்சக்தியில் இயங்குபவை! 2018இல் விற்பனையான... Continue Reading →

தமிழீழம் – முள்ளிவாய்க்கால் – இனவழிப்பு – பன்னாட்டு அரசியல் சதிகள்!

ஈழத்தின் மீது நடத்தப்பட்ட இனவழிப்புப் போர்களில், கொடூரமாகவும் மூர்க்கமாகவும் நடந்தேறியது முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தப்பட்ட 2009 போர்! இலங்கைத் தீவின் சிங்கள ’அரசு’தான் முன்னின்று நடத்தியது எனினும், 2002 தொடக்கம் பல்வேறு நாடுகளின் தொடர் சதிகளிலும் வலைப்பின்னல்களும் இல்லாமல் நடந்தேறவில்லை. ஈழம் குறித்தான உணர்ச்சிகள், கதறல்களுக்கு அப்பாற்பட்டு, 2002 முதல் 2018 வரை நடந்த, நடக்கும் அரசியல்களின் தொகுப்பை ஆராயாமல் விடுவோமேயானால், கடைசிவரை தமிழர்களுக்காக அழுதுக்கொண்டு மட்டுமே நிற்க முடியும்! தீர்வை நோக்கி நகர்வது கடினமே! இன்னும்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑