தாய்மொழிக் கல்வியும் பிறமொழிகள் கற்பதன் அவசியமும்

மொழி என்பதில் சிறியது, பெரியது என்று ஒன்றுமே இல்லை! வீட்டின் மொழியையும் கற்பிக்கப்படும் மொழியையும் இணைப்பதால், தாய் மொழிக்கல்வியே சிறந்தது. தாய் மொழியினை குழந்தை முழுமையாக பகுத்துணரும் வரையில் கல்வி மொழி தாய் மொழியிலேயே இருத்தல் வேண்டும். அந் நிலத்தில் பெரும்பான்மையினர் பேசும் மொழியினை தாய் மொழியென கொள்ளல் ஆகாது – UNESCO 1953. தாய் மொழி குறித்தான விளக்கம் பலவகையில் மாறுபட்டாலும், ஒரு குழந்தை எந்த மொழியின் மூலமாக இவ்வுலகை அறியத் தொடங்குகிறதோ அதுவே தாய்... Continue Reading →

உலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்?

(இக்கட்டுரை பூவுலகு மாத இதழுக்காக எழுதபட்டது. ஆகஸ்து மாத அச்சு இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) உலகம் ஒரே ஆண்டில் கடும் குளிரையும் கடும் வெப்பத்தையும் சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு, ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கிரீஸ், சைபீரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனிப்பொழிவையும் தொடர்ச்சியான கடும் குளிரையும் கொடுத்தது. அடுத்த மூன்று மாதங்களில் இதே நாடுகள் கடுமையான வெப்ப அலையை சந்தித்து வருகிறது. காலநிலையியல் அளவுகோலின் படி, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், தொடர்ச்சியான மூன்று அதி... Continue Reading →

கலைஞரும் நானும்! வெறுப்பு முதல் நேசம் வரை!

(என் முகநூல் பக்கத்தில், கலைஞர் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு எழுதியது) எனக்கு அரசியல் விவரம் தெரிந்த வயதில் இருந்து நான் வைகோவின் ஆதரவாளன். அது என் தந்தையால் நிகழ்ந்த அரசியல் பார்வை. 2001இல் மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிடப்பட்டபொழுதும், 2006இல் மதிமுக வெளியேறிய பொழுதும் கூட திமுகவின் எதிரி நான். கலைஞர் கருணாநிதியின் எதிரி நான். 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வேலூர் சிறையில், அவர் வைகோவைச் சென்று பார்த்தது முதல், நாடாளுமன்றத் தேர்தல்... Continue Reading →

தமிழகத்தில் இயற்கை முறை பிரசவமும் அயல்நாட்டு நடைமுறைகளும்!

அயல்நாடுகளில் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சில நாட்களாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. இணையத்தில் கிடைக்கும் ஒரு வரிச் செய்தியினை ஆதாரமாக எடுத்து பேசி வருகிறார்கள். நோர்வே நாட்டில் இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்தவர்கள் என்ற முறையில் எனது (எங்களது) அனுபவத்தோடு சில கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். பெண் வயிற்றில் கரு உண்டானது முதல் நாம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் முதல் நிலை மருத்துவமனையில் பதிவு செய்திட வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது இரண்டு நாட்கள், கரு... Continue Reading →

தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்

குறிப்பு: ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) எழுதி தமிழ்நெட் இணையத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் மாறாமல் தமிழுக்கு ஏற்றவகையில் மொழிப்பெயர்த்து உள்ளேன். ஆக, இக்கட்டுரையின் கருத்துக்களுக்கு ஆதித்தன் ஜெயபாலன் அவர்களே உரிமையுடையவர் ஆவார். ஆங்கில வடிவத்தின் இணையச் சுட்டி: http://tamilnet.com/art.html?catid=79&artid=39156 பின் குறிப்பு: ஆதித்தன் ஜெயபாலன், ஈழத்து கவிஞரும் தமிழ்த்திரைப்பட நடிகருமான... Continue Reading →

அண்ணல் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தைக் கிழித்தெறியும் பாஜகவின் அரசியல்!

மொழி வழி மாநிலங்கள் உருவாக்க காங்கிரஸ் முதலில் தயங்கிய போதும், அதன் சாத்தியக்கூறுகள், பலவீனங்கள் குறித்து ஆராய அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களால் அமைக்கப்பட்ட தார் குழுவிற்கு (Dar Commission), 1948 அக்டோபர் மாதம் அண்ணல் அம்பேத்கார் வழங்கிய பரிந்துரையில், மொழி வழி மாநிலங்களின் தேவையை ஆதரித்ததோடு, அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கார் பரிந்துரைத்திருந்தார். (ஆதாரம்: http://www.allsubjectjournal.com/download/2609/3-3-113-456.pdf) அண்ணல் அம்பேத்காரை பொறுத்தவரை, "ஒரு மொழி, ஒரு... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑