சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்நிலைப் படிப்பிற்கான வழிகாட்டல்

சுவீடன் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பொறியியல் அல்லது இளநிலை பொறியியல் கல்வியில் சேர முதலில் எந்தப் பல்கலைகழகங்களில் எந்தத் துறை சிறந்தது என அறிந்துக்கொள்ளுதல் நலம். அதேப்போல, உலகத் தர வரிசைகளில் எத்தகைய தர நிலையில் அப்பல்கலைக்கழகங்கம் இடம் வகித்துள்ளன என்பதனையும் அறிந்துக்கொள்ள வேண்டும். கல்விக்கட்டணமாக அரையாண்டிற்கு ஒருமுறை கட்ட வேண்டியத் தொகை 5, 50,000 ரூபாய் வரை ஆகும். அதேபோல, நுழைவுரிமை (visa) விண்ணப்பம் சமர்பிக்கும் பொழுதே,  இரண்டாண்டிற்கான ஒட்டுமொத்த சராசரி வாழ்க்கைச் செலவான … சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்நிலைப் படிப்பிற்கான வழிகாட்டல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அமைப்பாய்த் திரள்வோம் – தமிழ்த் தேசிய நோக்கில்!

(முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் புத்தகத்தை முன்னிறுத்திய பார்வை) சமூகம், அரசியல், நிர்வாகம், மேலாண்மை, குடும்பம் என எவ்வித அமைப்புகளுக்கும் அவை வெற்றிகரமாகவும் கட்டுக்கோப்பாகவும் இயங்க அதற்கென சில பொதுவான சூத்திரங்களை ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகம் வழியே நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அதேவேளை, ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தை தமிழ்த்தேசியக் கருத்தியலின் பார்வையில் புரிந்துக்கொள்ளவும் முடியும். தமிழ்த்தேசியம்: தமிழர் தேசத்தின் குடிகளுக்கான பாதுகாப்பு, வாழ்வியல் மேம்பாடு, மொழியின் வளர்ச்சி, நிலத்தின் பாதுகாப்பு, தேசத்தினுள் இருக்கும் குடிகளின் ஏற்றத் தாழ்வற்ற … அமைப்பாய்த் திரள்வோம் – தமிழ்த் தேசிய நோக்கில்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழர் கடலும் தமிழீழ அரசியலும் – ராஜபக்சேக்களின் போக்கும் நம் வருங்கால இலக்கும்!

இலங்கைத் தீவின் சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சியின் தலைமைக்கு சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் வருகையினைத் தொடர்ந்து, தமிழர் ’தேசம்’ தங்களின் அரசியல் பாதை பயணிக்க வேண்டிய திசை குறித்தான விவாதத்தினைத் தொடங்கும் முன்னரே, இந்திய ஒன்றியத்தினதும் சிங்களத் தரப்பினதும் சந்திப்புகளும் காய் நகர்த்தலும் பெருவீச்சில் செயல்படத் தொடங்கிவிட்டன. மறுபுறம், எவ்வித அரசியல் கணக்கீடுகளும் இன்றி, ராஜபக்சேக்கள் சீனாவின் சார்பானவர்கள், ஆதலால், இந்தியா தமிழர்கள் பக்கம் தடம் மாறுவர் என பழைய பல்லவிகள் ’சமரசவாதிகளால்’ மீண்டும் வேர்விடத் … தமிழர் கடலும் தமிழீழ அரசியலும் – ராஜபக்சேக்களின் போக்கும் நம் வருங்கால இலக்கும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.