ஃபின்லாந்தின் ‘பெண்களின்’ அரசாங்கமும் சுவீடனின் ‘பெண்ணிய’ அரசாங்கமும்

(சென்னை சோகா இகேதா கல்லூரியின் ஆங்கிலத் துறையும் தமிழ்த்துறையும் இணைந்து மார்ச் 7, 2020 அன்று நடத்திய 'புதிய பாதையில் பெண்கள்' என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்காக எழுதப்பட்டக் கட்டுரை) சில மாதங்களுக்கு முன்பு இளைய வயது (34 வயது) ஃபின்லாந்து பெண் சன்னா மரினா அந்நாட்டின் பிரதமர் ஆனது, அரசாங்கத்தின் அமைச்சரவை பெரும்பாலுமான இளையப் பெண்களால் கட்டியமைக்கப்பட்டச் செய்தி, கூட்டணி அரசாங்கத்தின் 5 கட்சிகளும் பெண்களின் தலைமை கொண்டது, அதிலும் 35 வயதிற்குள்ளான தலைவிகள் என... Continue Reading →

பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி – தமிழை உலகெங்கும் கொண்டுச் செல்வோம் வாருங்கள்!

சமீபத்தில் இணையெமுங்கும் பரவி இருந்த சீனர்களின் தமிழ்க்கல்வி, தமிழ் பேராசிரியையின் பேச்சுக்களை தொடர்ந்து கவனித்து இருப்போம். தமிழ் நாட்டிற்கு வெளியே தமிழில் உயர்கல்வி வாய்ப்பு இருக்கா? என சிலர் ஆச்சரியத்துடன் கேட்டனர். தமிழ் படித்தால் ஆசிரியர் வேலைக்கும் பேராசிரியராகவும் அல்லது அரசுத் தேர்வுக்கு செல்லவும் மட்டும்தானே முடியும் என பலர் சோர்ந்துவிடுகின்றனர். ஒரிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும் சிந்துவெளி நாகரீகத்தின் தமிழ் வரலாற்றுத் தொடர்பை ஆய்வு செய்து வருபவருமான திரு. பாலகிருஷ்ண்ணன் தமிழ் இலக்கியம் படித்து, தமிழிலேயே... Continue Reading →

ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி: வாய்ப்புகள் என்ன? எப்படி அணுகுவது?

ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி படிக்கும் நம்மூர் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தாலும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தான பல தகவல்கள் நம்மூரின் பலத்தரப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை. வாய்ப்புகளை எப்படி தெரிந்துக் கொள்வது? யாரை அணுகுவது? எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்வது? போன்ற வினாக்களுக்கு முடிந்த அளவிற்கு தகவல்களை சேகரித்து தொகுத்துள்ளேன். ஐரோப்பிய நாடுகளில் வாழும்பொழுது கல்விக்கட்டணம் தவிர்த்து வாழ்க்கைச் செலவுதான் பெரும்பாலும் நம்முடைய செலவாக இருக்கும். அதுவும் வாரத்திற்கு 20 மணி... Continue Reading →

மரபுசாரா எரிசக்தி கொள்கை – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்னென்ன?

காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, மின்சாரம் மற்றும் போக்குவரத்திற்கு பயன்பட்டு வரும் படிம எரிவாயுக்களில் இருந்து மரபுசாரா ஆற்றலினை நோக்கின செயல்திட்டங்களை பல்வேறு நாடுகளும் உருவாக்கி வைத்திருக்கின்றன. அவைகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். மரபுசாரா ஆற்றல் உருவாக்கும் மூலங்களில் சூரியக்கதிர், காற்றாலை, நீராற்றல், அலைவீச்சு, புவிவெப்பசக்தி, உயிரி எரிசக்தி ஆகியவைகள் உள்ளடக்கம். ஐரோப்பிய நிலவரங்கள் என்ன?: 2050ற்குள் காலநிலை பொதுமை அடையும் முதல் கண்டமாக (climate neutral continent) ஐரோப்பிய... Continue Reading →

தாய்மொழிக்கல்வியும் அரசியல் உரிமை உணர்வும்!

(அமெரிக்க ஐக்கிய அரசுகள் நாட்டின் பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டத்தின் "Common Sense" March 2020 இதழுக்காக எழுதப்பட்டக் கட்டுரை). மொழி என்பதனை தொடர்பாடலுக்கான ஊடகமாகக் கருதுவோரும் உண்டு, இன உணர்வின் அடையாளமாகக் கருதுவோரும் உண்டு, நிலத்தின், பண்பாட்டின், தேசியத்தின் அடையாளமாக உருவகப்படுத்துவோரும் உண்டு. தாய்மொழி மனிதர்களை இணைத்து பலமாக்குவதோடு, இன வழி தேசிய உணர்வினை மேலோங்கச் செய்து, தங்கள் தாயக உரிமையை மீட்பு, தமது நிலத்தின் இறையாண்மை மீட்பு என இட்டுச் செல்கிறது என்பதே நாம்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑