தமிழ்நாடு அரசியலும் ‘புலி’ப்பார்வையும்!

தமிழீழ விடுதலைப் புலிகளை நேசிப்போர், தமிழீழ விடுதலையினை அதிதீவிரமாக ஆதரிப்போர் அனைவரும் 2009ற்குப் பின் தமிழ்நாடு சார்ந்த அரசியல் பார்வையில் புலிகள் எதனை கையாண்டார்கள் என்பதனை கற்க மறந்துவிட்டனர் என்றே எண்ணத் தோன்றுகிறது. 80களின் முற்பகுதி வரை, கொரில்லாப் போரில் நின்றவர்களுக்கு தமிழகம் தங்கள் இல்லம்...எப்பொழுதும் வரலாம், எப்பொழுதும் செல்லலாம்..முக்கியக் கட்சிகளின் செல்லப்பிள்ளைகள்....தமிழ்நாடு 'அரசின்' அன்புப் பிள்ளைகள். திராவிடர் கழகத்தின் பெரியார் திடல் அஞ்சல் முகவரி என வலம் வந்தார்கள்... இந்திய அரசின் அதிஉட்சத் தலையீடு, குறுக்கீடு, … தமிழ்நாடு அரசியலும் ‘புலி’ப்பார்வையும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஃபின்லாந்தின் ‘பெண்களின்’ அரசாங்கமும் சுவீடனின் ‘பெண்ணிய’ அரசாங்கமும்

(சென்னை சோகா இகேதா கல்லூரியின் ஆங்கிலத் துறையும் தமிழ்த்துறையும் இணைந்து மார்ச் 7, 2020 அன்று நடத்திய 'புதிய பாதையில் பெண்கள்' என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்காக எழுதப்பட்டக் கட்டுரை) சில மாதங்களுக்கு முன்பு இளைய வயது (34 வயது) ஃபின்லாந்து பெண் சன்னா மரினா அந்நாட்டின் பிரதமர் ஆனது, அரசாங்கத்தின் அமைச்சரவை பெரும்பாலுமான இளையப் பெண்களால் கட்டியமைக்கப்பட்டச் செய்தி, கூட்டணி அரசாங்கத்தின் 5 கட்சிகளும் பெண்களின் தலைமை கொண்டது, அதிலும் 35 வயதிற்குள்ளான தலைவிகள் என … ஃபின்லாந்தின் ‘பெண்களின்’ அரசாங்கமும் சுவீடனின் ‘பெண்ணிய’ அரசாங்கமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அமைப்பாய்த் திரள்வோம் – தமிழ்த் தேசிய நோக்கில்!

(முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் புத்தகத்தை முன்னிறுத்திய பார்வை) சமூகம், அரசியல், நிர்வாகம், மேலாண்மை, குடும்பம் என எவ்வித அமைப்புகளுக்கும் அவை வெற்றிகரமாகவும் கட்டுக்கோப்பாகவும் இயங்க அதற்கென சில பொதுவான சூத்திரங்களை ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகம் வழியே நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அதேவேளை, ’அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தை தமிழ்த்தேசியக் கருத்தியலின் பார்வையில் புரிந்துக்கொள்ளவும் முடியும். தமிழ்த்தேசியம்: தமிழர் தேசத்தின் குடிகளுக்கான பாதுகாப்பு, வாழ்வியல் மேம்பாடு, மொழியின் வளர்ச்சி, நிலத்தின் பாதுகாப்பு, தேசத்தினுள் இருக்கும் குடிகளின் ஏற்றத் தாழ்வற்ற … அமைப்பாய்த் திரள்வோம் – தமிழ்த் தேசிய நோக்கில்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழர் கடலும் தமிழீழ அரசியலும் – ராஜபக்சேக்களின் போக்கும் நம் வருங்கால இலக்கும்!

இலங்கைத் தீவின் சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சியின் தலைமைக்கு சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் வருகையினைத் தொடர்ந்து, தமிழர் ’தேசம்’ தங்களின் அரசியல் பாதை பயணிக்க வேண்டிய திசை குறித்தான விவாதத்தினைத் தொடங்கும் முன்னரே, இந்திய ஒன்றியத்தினதும் சிங்களத் தரப்பினதும் சந்திப்புகளும் காய் நகர்த்தலும் பெருவீச்சில் செயல்படத் தொடங்கிவிட்டன. மறுபுறம், எவ்வித அரசியல் கணக்கீடுகளும் இன்றி, ராஜபக்சேக்கள் சீனாவின் சார்பானவர்கள், ஆதலால், இந்தியா தமிழர்கள் பக்கம் தடம் மாறுவர் என பழைய பல்லவிகள் ’சமரசவாதிகளால்’ மீண்டும் வேர்விடத் … தமிழர் கடலும் தமிழீழ அரசியலும் – ராஜபக்சேக்களின் போக்கும் நம் வருங்கால இலக்கும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் – உலகப்பார்வை

(அந்திமழை மாத இதழுக்கு எழுதியக் கட்டுரை - மே 2019) இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புகளும் வாக்குப் பதிவிற்கு பிந்தைய கணிப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. கடந்த 10-20 ஆண்டுகளிலேயே இணைய வசிதிகள் பெருகியதன் விளைவில், சமூக ஊடகங்கள் அவரவர் கைகளில் எந்நேரமும் தவழத் தொடங்கியப் பிறகு, தேர்தலுக்கு முன்பே நம் மக்கள் மீது பல்வேறு சிந்தனை ஊடுறுவல்களும் சிந்தனை மடைமாற்றங்களும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இது போதாதென்று, தனியார் … தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் – உலகப்பார்வை-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழீழம் – முள்ளிவாய்க்கால் – இனவழிப்பு – பன்னாட்டு அரசியல் சதிகள்!

ஈழத்தின் மீது நடத்தப்பட்ட இனவழிப்புப் போர்களில், கொடூரமாகவும் மூர்க்கமாகவும் நடந்தேறியது முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தப்பட்ட 2009 போர்! இலங்கைத் தீவின் சிங்கள ’அரசு’தான் முன்னின்று நடத்தியது எனினும், 2002 தொடக்கம் பல்வேறு நாடுகளின் தொடர் சதிகளிலும் வலைப்பின்னல்களும் இல்லாமல் நடந்தேறவில்லை. ஈழம் குறித்தான உணர்ச்சிகள், கதறல்களுக்கு அப்பாற்பட்டு, 2002 முதல் 2018 வரை நடந்த, நடக்கும் அரசியல்களின் தொகுப்பை ஆராயாமல் விடுவோமேயானால், கடைசிவரை தமிழர்களுக்காக அழுதுக்கொண்டு மட்டுமே நிற்க முடியும்! தீர்வை நோக்கி நகர்வது கடினமே! இன்னும் … தமிழீழம் – முள்ளிவாய்க்கால் – இனவழிப்பு – பன்னாட்டு அரசியல் சதிகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்!

”HSBC World in Forecast 2050” வழங்கிய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017இல் வெளியான Price WaterHouse Coopers (PWC) அறிக்கையில், ”இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேவேளை, அமெரிக்காவின் பசிபிக் இராணுவ கட்டுப்பாட்டு மையத்தினை, மே 2018இல் இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையமாக மாற்றி அமைத்து இந்தியப் பெருங்கடல் பகுதியினையும் தனது வலைக்குள் விழவைத்துள்ளதையும் … இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு!

இலங்கைத் தீவை அரசியல் ரீதியாக ஆண்டுக்கொண்டிருக்கும் சிங்கள தேசம், தமிழர் வரலாற்றுப் பகுதியான குமரிக்கண்டத்தின் பெரும்பகுதியை தன் தேசிய உரிமைசார் சொத்தாக ஐக்கிய நாடுகளின் ஒப்புதலுடனும் சர்வதேச நாடுகளின் துணையுடனும் கைப்பற்றத் துடித்து வருவதாக தமிழ்நெட் இணையச் செய்தி வழியே அறிய முடிந்தது (https://tamilnet.com/art.html?catid=79&artid=39261). சர்வதேச விதிமுறைகளின் படி, கடல்சார்ந்த அரசுகள் தன் நிலத்தில் இருந்து முதல் 12 நாட்டிகல் மைல் தொலைவை கடல் எல்லையென வரையறுக்கலாம். அதற்கும் அப்பால், 200 நாட்டிகள் மைல் தொலைவு என … சிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலைஞரும் நானும்! வெறுப்பு முதல் நேசம் வரை!

(என் முகநூல் பக்கத்தில், கலைஞர் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு எழுதியது) எனக்கு அரசியல் விவரம் தெரிந்த வயதில் இருந்து நான் வைகோவின் ஆதரவாளன். அது என் தந்தையால் நிகழ்ந்த அரசியல் பார்வை. 2001இல் மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிடப்பட்டபொழுதும், 2006இல் மதிமுக வெளியேறிய பொழுதும் கூட திமுகவின் எதிரி நான். கலைஞர் கருணாநிதியின் எதிரி நான். 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வேலூர் சிறையில், அவர் வைகோவைச் சென்று பார்த்தது முதல், நாடாளுமன்றத் தேர்தல் … கலைஞரும் நானும்! வெறுப்பு முதல் நேசம் வரை!-ஐ படிப்பதைத் தொடரவும்.