போக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே

(பூவுலகு ஏப்ரல் 2019 மாத இதழுக்காக எழுதப்பட்டது) உலக நாடுகளுக்கு நோர்வே முன்மாதிரியாக திகழ்கிறது எனச் சொன்னால் மிகையில்லை! போக்குவரத்தினால் உண்டாகும் காற்று மாசைக் குறைக்க நோர்வே எடுத்துவரும் முயற்சியை அனைவரும் உற்றுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இவைகள் குறித்த பார்வையே இக்கட்டுரை! இக்கட்டுரையைப் பொறுத்தவரை தொழிற்நுட்ப விளக்கங்கள் குறைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் மாசில்லா போக்குவரத்துக்கள் பற்றின செய்திகளை உள்ளடக்கியே எழுதப்பட்டிருக்கிறது. மார்ச் 2019ன் கணக்கின் படி, நோர்வே நாட்டில் விற்பனையான மகிழுந்துகளில் 58% மின்சக்தியில் இயங்குபவை! 2018இல் விற்பனையான... Continue Reading →

நியூட்ரினோ திட்ட எதிர்ப்பும் அறிவியல் எதிர்ப்பும்! இரண்டும் வெவ்வேறானவை!

தேனியில் அமைப்பதாக சொல்லும் இந்தியாவின் அறிவியல் திட்டத்தை எதிர்க்கும் குரல் எத்தகையது? ஏன் உருவானது? என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் மிக எளிமையாக புறந்தள்ளிவிட்டு அறிவியல் மேட்டிமைத்தனத்தோடு இந்திய அதிகார வர்க்கமும் அறிவியல் வர்க்கமும் நடந்துகொள்வது இந்தியாவின் வருங்கால அறிவியல் மற்றும் வளர்ச்சிப்பாதையில் பெருங்கனவு கொண்ட என்னைப் போன்ற இளம் அறிவியலாளர்களுக்கு அதிர்ச்சியும் அயர்ச்சியும்தான் உருவாகிறது. நியூட்ரினோ ஆய்வோ அல்லது வேறு ஏதேனும் அறிவியல் ஆய்வோ, பொதுவாகவே, பொதுமக்கள் எப்பொழுதும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாழ்விடமோ வாழ்வாதாரமோ பாதிக்கும் என நம்பினால்... Continue Reading →

மரபுசாரா மின் உற்பத்தி நன்மைகளும் உலகின் பார்வைகளும்

(பூவுலகு மாத இதழுக்காக எழுதப்பட்டது – டிசம்பர் 2017) இன்றைய நவீன உலகின் தேவைகளிலும் பிரச்சனைகளிலும் முதன்மையான பங்காற்றுவது மின்சாரம். உற்பத்தி முறைகளிலும் செயல்வடிவிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைகளினால் காற்று மாசடைதல்/கார்பன் உமிழ்வு, இவைகளால் தீங்கின் கொடும் எல்லைக்கு இட்டுச்சென்ற புவி வெப்பமடைதல் உட்பட எரிபொருள் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் மரபு சாரா எரிசக்தி உற்பத்தி நோக்கி நவீன உலகம் பயணிக்கத் தொடங்கியுள்ளது.... Continue Reading →

மீத்தேன்-ஐதரோகார்பன் (hydrocarbon) – எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டம்

(பூவுலகு மாத இதழுக்காக (2017 மார்ச்) எழுதப்பட்ட கட்டுரை) ஐதரோகார்பன் – hydrocarbon – நீரகக்கரிமம் எனப்படுவது நீரகம் (hydrogen) மற்றும் கரிமம் (carbon) ஆகிய இரு தனிமங்களின் பல்வேறு கூட்டுச்சேர்க்கையில் உருவாகும் வெவ்வேறு விதமான பொருள்களுக்கான பொதுப்பெயர். நீரகத்தையும் கார்பனையும் சேர்த்து நிற்கும் பிணைப்புகளில் (bonds) அதிகளவிலான வேதியியல் ஆற்றல் பொதிந்திருக்கும். ஐதரோகார்பன் வெடிக்கும்பொழுதோ எரிக்கப்படும்பொழுதோ நிகழும் சிதைத்தலினால் (decomposition) பெருமளவு ஆற்றல் வெளிப்படும். குறைந்த அளவிலான ஐதரோகார்பன் கூட பெருமளவு ஆற்றலை வெளிப்படுத்துவதால், எரிசக்தி... Continue Reading →

நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப்படையெடுப்பு

1991களுக்கு பிறகான இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்தும் அமெரிக்க மையப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய துணைக்கண்டத்தின் அறிவியல் ஆய்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிபொடி வேலை செய்வதையே நோக்கமாக இருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணமே நியூட்ரினோ ஆய்வு திட்டம். எப்படி என்பதனையும் ஏன் என்பதனையும் தொடர்ச்சியாக எனது எழுத்தின் ஊடாக புரிய வைக்கும் முயற்சியே இக்கட்டுரை. இந்திய துணைக்கண்டத்தின் தேசங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு நாடாக மாறிய சூழலில் மாபெரும் அறிவியல் அறிஞர் சர்.சி.வி. ராமன் எத்தகைய அறிவியல்... Continue Reading →

நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து

இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேற செய்திருந்தாலும், நிலையான முடிவுகளை நவீன அறிவியல் உலகம் இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு முனைகளில் இதுதொடர்பான இயற்பியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது. அதில்... Continue Reading →

“கடவுள் துகளா”? அல்லது “கடவுள் மறுப்பு துகளா”?

சமீப கால பத்திரிக்கை உலகமெல்லாம், “கடவுள் துகள்” கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது “கடவுள் துகளா”? அல்லது “கடவுள் மறுப்பு துகளா”? என்பது ஒருபுறம் இருக்கட்டும். நாம் வாழும் உலகைப் பற்றி நடந்த மிக முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி இது. இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் அடிப்படை புரிதல் இந்த... Continue Reading →

கூடங்குளம் – அணுவியலும் அரசியலும்

சமீப காலமாக தமிழகத்தில் பல உரிமை போராட்டங்கள் கட்சிகளை கடந்து அரசியல் தலைவர்களின் தலைமையைக் கடந்து மக்களின் கூட்டுத் தலைமைகளின் கீழ் அல்லது பெருவாரியான மக்களின் ஆதரவுடன் நடந்து வருகிறது. அத்தகைய போராட்டங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் போராட்டம் தோல்வி பெருமாயின் மிக கொடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான போராட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம். இதுவரை காலம் அமைதி காத்துவந்த தமிழக அரசு அசுர வேகத்துடன் மத்திய அரசின் செயலை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑