பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி – தமிழை உலகெங்கும் கொண்டுச் செல்வோம் வாருங்கள்!

சமீபத்தில் இணையெமுங்கும் பரவி இருந்த சீனர்களின் தமிழ்க்கல்வி, தமிழ் பேராசிரியையின் பேச்சுக்களை தொடர்ந்து கவனித்து இருப்போம். தமிழ் நாட்டிற்கு வெளியே தமிழில் உயர்கல்வி வாய்ப்பு இருக்கா? என சிலர் ஆச்சரியத்துடன் கேட்டனர். தமிழ் படித்தால் ஆசிரியர் வேலைக்கும் பேராசிரியராகவும் அல்லது அரசுத் தேர்வுக்கு செல்லவும் மட்டும்தானே முடியும் என பலர் சோர்ந்துவிடுகின்றனர். ஒரிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும் சிந்துவெளி நாகரீகத்தின் தமிழ் வரலாற்றுத் தொடர்பை ஆய்வு செய்து வருபவருமான திரு. பாலகிருஷ்ண்ணன் தமிழ் இலக்கியம் படித்து, தமிழிலேயே... Continue Reading →

ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி: வாய்ப்புகள் என்ன? எப்படி அணுகுவது?

ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி படிக்கும் நம்மூர் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தாலும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தான பல தகவல்கள் நம்மூரின் பலத்தரப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை. வாய்ப்புகளை எப்படி தெரிந்துக் கொள்வது? யாரை அணுகுவது? எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்வது? போன்ற வினாக்களுக்கு முடிந்த அளவிற்கு தகவல்களை சேகரித்து தொகுத்துள்ளேன். ஐரோப்பிய நாடுகளில் வாழும்பொழுது கல்விக்கட்டணம் தவிர்த்து வாழ்க்கைச் செலவுதான் பெரும்பாலும் நம்முடைய செலவாக இருக்கும். அதுவும் வாரத்திற்கு 20 மணி... Continue Reading →

தாய்மொழிக்கல்வியும் அரசியல் உரிமை உணர்வும்!

(அமெரிக்க ஐக்கிய அரசுகள் நாட்டின் பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டத்தின் "Common Sense" March 2020 இதழுக்காக எழுதப்பட்டக் கட்டுரை). மொழி என்பதனை தொடர்பாடலுக்கான ஊடகமாகக் கருதுவோரும் உண்டு, இன உணர்வின் அடையாளமாகக் கருதுவோரும் உண்டு, நிலத்தின், பண்பாட்டின், தேசியத்தின் அடையாளமாக உருவகப்படுத்துவோரும் உண்டு. தாய்மொழி மனிதர்களை இணைத்து பலமாக்குவதோடு, இன வழி தேசிய உணர்வினை மேலோங்கச் செய்து, தங்கள் தாயக உரிமையை மீட்பு, தமது நிலத்தின் இறையாண்மை மீட்பு என இட்டுச் செல்கிறது என்பதே நாம்... Continue Reading →

உலக நாடுகளில் ஆராய்ச்சித் துறை வேலை வாய்ப்புகள் (அறிவியல் துறை)!

உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அயல்நாட்டினருக்கான பலத்தரப்பட்ட ஆராய்ச்சித்துறை பணி வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதனை எப்படி அணுகுவது, என்னென்ன திறன் மற்றும் தேர்ச்சி பெற்றிருப்பது என பலரது கேள்விகளுக்கு முடிந்த அளவிற்கு தகவல்களைத் திரட்டியுள்ளேன். முதற்கட்டமாக, அறிவியல் துறையின் வேலைவாய்ப்புகள் குறித்தான தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்! முனைவர் பட்டத்திற்கான ஆய்வு என்பது ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்புப் போன்றதுதான். மாதாந்திர ஊதியமும் சில பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மாணாக்கருக்கு பாடம் எடுக்க வேண்டியதாகவும் கூட இருக்கும். எவ்வளவு ஊதியம் பெற... Continue Reading →

சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்நிலைப் படிப்பிற்கான வழிகாட்டல்

சுவீடன் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பொறியியல் அல்லது இளநிலை பொறியியல் கல்வியில் சேர முதலில் எந்தப் பல்கலைகழகங்களில் எந்தத் துறை சிறந்தது என அறிந்துக்கொள்ளுதல் நலம். அதேப்போல, உலகத் தர வரிசைகளில் எத்தகைய தர நிலையில் அப்பல்கலைக்கழகங்கம் இடம் வகித்துள்ளன என்பதனையும் அறிந்துக்கொள்ள வேண்டும். கல்விக்கட்டணமாக அரையாண்டிற்கு ஒருமுறை கட்ட வேண்டியத் தொகை 5, 50,000 ரூபாய் வரை ஆகும். அதேபோல, நுழைவுரிமை (visa) விண்ணப்பம் சமர்பிக்கும் பொழுதே,  இரண்டாண்டிற்கான ஒட்டுமொத்த சராசரி வாழ்க்கைச் செலவான... Continue Reading →

தமிழ் வழிக்கல்வியும் அப்பா அம்மாக்களின் பெரும்பங்கும்!

(2016 ஜூன் மாதம் எழுதப்பட்டது) எங்களது (விஜய் அசோகன்-இளவரசி வேலண்டினா) மூத்த மகன் கவின் திலீபனுக்கு இதோ ஆறு வயது நெருங்கப்போகிறது. அவரை நாங்கள் இன்னும் பள்ளிக்கூடம் சேர்க்கவில்லை. தாய் மொழி வழிக்கல்வி, அரசு பள்ளி என்பதில் நாங்கள் இருவரும் தீர்க்கமாக இருக்கிறோம். அதனினும் தீர்க்கமாக, பெரும் பொருட்செல்வு செய்து, இன்றைய மன அழுத்தம் தரும் தனியார் பள்ளிக்கூட பாட முறைகளுக்குள் எங்களது குழந்தைகளை சிக்க வைத்து அவர்கள் வாழ்வை சிதைக்க வைக்க நாங்கள் துளியும் விரும்பவில்லை.... Continue Reading →

கல்வித்தடுமாற்றங்கள் – தனியார் பள்ளிகளும் அரசுப்பள்ளிகளும்

நீட் தேர்வு மற்றும் அனைத்து இந்திய பொது நுழைவுத்தேர்வுகளுக்கு பின்னால் ஒழிந்திருக்கும் அரசியலையும் சமூக நீதிக்கு எதிரான அச்செயல்கள் எப்படி அடித்தட்டு மக்களை பாதிக்கும் என்பதனையும் பிறகு விரிவாக அலசுகிறேன். இப்பொழுது பேச விரும்புவது வேறு. நீட் தேர்வை எதிர்க்கும் பலரும் மத்திய அரசின் பாடத்திட்டங்களும் மாநில அரசின் பாடத்திட்டங்களும் வெவ்வேறானவை அதனால் எதிர்க்கிறோம் என்ற வாதம் வைக்கும்பொழுது மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகிறது. ஐ.ஐ.டி, எய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் உயர்த்தர (நிதி ஒதுக்கீட்டு பாகுபாட்டு முறையால்)... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑