மரபுசாரா எரிசக்தி கொள்கை – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்னென்ன?

காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, மின்சாரம் மற்றும் போக்குவரத்திற்கு பயன்பட்டு வரும் படிம எரிவாயுக்களில் இருந்து மரபுசாரா ஆற்றலினை நோக்கின செயல்திட்டங்களை பல்வேறு நாடுகளும் உருவாக்கி வைத்திருக்கின்றன. அவைகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். மரபுசாரா ஆற்றல் உருவாக்கும் மூலங்களில் சூரியக்கதிர், காற்றாலை, நீராற்றல், அலைவீச்சு, புவிவெப்பசக்தி, உயிரி எரிசக்தி ஆகியவைகள் உள்ளடக்கம். ஐரோப்பிய நிலவரங்கள் என்ன?: 2050ற்குள் காலநிலை பொதுமை அடையும் முதல் கண்டமாக (climate neutral continent) ஐரோப்பிய … மரபுசாரா எரிசக்தி கொள்கை – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்னென்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

போக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே

(பூவுலகு ஏப்ரல் 2019 மாத இதழுக்காக எழுதப்பட்டது) உலக நாடுகளுக்கு நோர்வே முன்மாதிரியாக திகழ்கிறது எனச் சொன்னால் மிகையில்லை! போக்குவரத்தினால் உண்டாகும் காற்று மாசைக் குறைக்க நோர்வே எடுத்துவரும் முயற்சியை அனைவரும் உற்றுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இவைகள் குறித்த பார்வையே இக்கட்டுரை! இக்கட்டுரையைப் பொறுத்தவரை தொழிற்நுட்ப விளக்கங்கள் குறைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் மாசில்லா போக்குவரத்துக்கள் பற்றின செய்திகளை உள்ளடக்கியே எழுதப்பட்டிருக்கிறது. மார்ச் 2019ன் கணக்கின் படி, நோர்வே நாட்டில் விற்பனையான மகிழுந்துகளில் 58% மின்சக்தியில் இயங்குபவை! 2018இல் விற்பனையான … போக்குவரத்துகளில் மரபுசாரா எரிசக்தி – உலகிற்கு வழிகாட்டும் நோர்வே-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்?

(இக்கட்டுரை பூவுலகு மாத இதழுக்காக எழுதபட்டது. ஆகஸ்து மாத அச்சு இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) உலகம் ஒரே ஆண்டில் கடும் குளிரையும் கடும் வெப்பத்தையும் சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு, ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கிரீஸ், சைபீரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனிப்பொழிவையும் தொடர்ச்சியான கடும் குளிரையும் கொடுத்தது. அடுத்த மூன்று மாதங்களில் இதே நாடுகள் கடுமையான வெப்ப அலையை சந்தித்து வருகிறது. காலநிலையியல் அளவுகோலின் படி, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், தொடர்ச்சியான மூன்று அதி … உலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நியூட்ரினோ திட்ட எதிர்ப்பும் அறிவியல் எதிர்ப்பும்! இரண்டும் வெவ்வேறானவை!

தேனியில் அமைப்பதாக சொல்லும் இந்தியாவின் அறிவியல் திட்டத்தை எதிர்க்கும் குரல் எத்தகையது? ஏன் உருவானது? என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் மிக எளிமையாக புறந்தள்ளிவிட்டு அறிவியல் மேட்டிமைத்தனத்தோடு இந்திய அதிகார வர்க்கமும் அறிவியல் வர்க்கமும் நடந்துகொள்வது இந்தியாவின் வருங்கால அறிவியல் மற்றும் வளர்ச்சிப்பாதையில் பெருங்கனவு கொண்ட என்னைப் போன்ற இளம் அறிவியலாளர்களுக்கு அதிர்ச்சியும் அயர்ச்சியும்தான் உருவாகிறது. நியூட்ரினோ ஆய்வோ அல்லது வேறு ஏதேனும் அறிவியல் ஆய்வோ, பொதுவாகவே, பொதுமக்கள் எப்பொழுதும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாழ்விடமோ வாழ்வாதாரமோ பாதிக்கும் என நம்பினால் … நியூட்ரினோ திட்ட எதிர்ப்பும் அறிவியல் எதிர்ப்பும்! இரண்டும் வெவ்வேறானவை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரபுசாரா மின் உற்பத்தி நன்மைகளும் உலகின் பார்வைகளும்

(பூவுலகு மாத இதழுக்காக எழுதப்பட்டது – டிசம்பர் 2017) இன்றைய நவீன உலகின் தேவைகளிலும் பிரச்சனைகளிலும் முதன்மையான பங்காற்றுவது மின்சாரம். உற்பத்தி முறைகளிலும் செயல்வடிவிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைகளினால் காற்று மாசடைதல்/கார்பன் உமிழ்வு, இவைகளால் தீங்கின் கொடும் எல்லைக்கு இட்டுச்சென்ற புவி வெப்பமடைதல் உட்பட எரிபொருள் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் மரபு சாரா எரிசக்தி உற்பத்தி நோக்கி நவீன உலகம் பயணிக்கத் தொடங்கியுள்ளது. … மரபுசாரா மின் உற்பத்தி நன்மைகளும் உலகின் பார்வைகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீத்தேன்-ஐதரோகார்பன் (hydrocarbon) – எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டம்

(பூவுலகு மாத இதழுக்காக (2017 மார்ச்) எழுதப்பட்ட கட்டுரை) ஐதரோகார்பன் – hydrocarbon – நீரகக்கரிமம் எனப்படுவது நீரகம் (hydrogen) மற்றும் கரிமம் (carbon) ஆகிய இரு தனிமங்களின் பல்வேறு கூட்டுச்சேர்க்கையில் உருவாகும் வெவ்வேறு விதமான பொருள்களுக்கான பொதுப்பெயர். நீரகத்தையும் கார்பனையும் சேர்த்து நிற்கும் பிணைப்புகளில் (bonds) அதிகளவிலான வேதியியல் ஆற்றல் பொதிந்திருக்கும். ஐதரோகார்பன் வெடிக்கும்பொழுதோ எரிக்கப்படும்பொழுதோ நிகழும் சிதைத்தலினால் (decomposition) பெருமளவு ஆற்றல் வெளிப்படும். குறைந்த அளவிலான ஐதரோகார்பன் கூட பெருமளவு ஆற்றலை வெளிப்படுத்துவதால், எரிசக்தி … மீத்தேன்-ஐதரோகார்பன் (hydrocarbon) – எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடலில் கலந்த எண்ணையும் நிலத்தில் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்பும்

(பூவுலகு மாத இதழுக்காக எழுதப்பட்டது - பிப் 2017) கடந்த 2017 ஜனவரி 28 ஆம் நாள், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு அருகே, சுமார் 1.8 நாட்டிகல் மைல் தொலைவில், எரிவாயுவை முழுமையாக இறக்கிவைத்துவிட்டு காலியாக துறைமுகத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்த சரக்கு கப்பலும் (MT BW Maple) மற்றும் எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும் (MT Dawn Kanchipuram) மோதிக்கொண்டதாக சொல்லப்பட்டது. அதில் இருந்து  65-100 டன் (பல மாறுபட்ட செய்திகளால் உறுதியாக சொல்ல முடியவில்லை) கச்சா எண்ணெய் … கடலில் கலந்த எண்ணையும் நிலத்தில் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்பும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப்படையெடுப்பு

1991களுக்கு பிறகான இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்தும் அமெரிக்க மையப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய துணைக்கண்டத்தின் அறிவியல் ஆய்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிபொடி வேலை செய்வதையே நோக்கமாக இருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணமே நியூட்ரினோ ஆய்வு திட்டம். எப்படி என்பதனையும் ஏன் என்பதனையும் தொடர்ச்சியாக எனது எழுத்தின் ஊடாக புரிய வைக்கும் முயற்சியே இக்கட்டுரை. இந்திய துணைக்கண்டத்தின் தேசங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு நாடாக மாறிய சூழலில் மாபெரும் அறிவியல் அறிஞர் சர்.சி.வி. ராமன் எத்தகைய அறிவியல் … நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப்படையெடுப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.

நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து

இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேற செய்திருந்தாலும், நிலையான முடிவுகளை நவீன அறிவியல் உலகம் இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு முனைகளில் இதுதொடர்பான இயற்பியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது. அதில் … நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.