கடலில் கலந்த எண்ணையும் நிலத்தில் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்பும்

(பூவுலகு மாத இதழுக்காக எழுதப்பட்டது - பிப் 2017) கடந்த 2017 ஜனவரி 28 ஆம் நாள், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு அருகே, சுமார் 1.8 நாட்டிகல் மைல் தொலைவில், எரிவாயுவை முழுமையாக இறக்கிவைத்துவிட்டு காலியாக துறைமுகத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்த சரக்கு கப்பலும் (MT BW Maple) மற்றும் எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும் (MT Dawn Kanchipuram) மோதிக்கொண்டதாக சொல்லப்பட்டது. அதில் இருந்து  65-100 டன் (பல மாறுபட்ட செய்திகளால் உறுதியாக சொல்ல முடியவில்லை) கச்சா எண்ணெய்... Continue Reading →

திராவிட இயக்கம் – 100 – திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி – 50

திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி 50 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், திராவிட இயக்கம் தன் இலக்கை அடைந்துவிட்டதா என்றால் இல்லை எனலாம். திராவிட இயக்கங்கள் (திக, திமுக, மதிமுக) தங்கள் இயக்க வரலாற்றோடு ஒட்டி இயங்குகிறதா என்றால் இல்லை எனலாம், திராவிட இயக்கங்கள் வலுவான அமைப்பாக நின்று தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாளும் நிலையில் உள்ளதா என்றால் இல்லை எனலாம், தமிழ்நாட்டிற்கான தமிழர்களுக்கான பாதுகாப்பு அரணை இவர்களால் வழங்க... Continue Reading →

சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)

 நோர்வேயின் அழகான மலைகளுக்கிடையேயும் தொடர்ச்சியாக பாய்ந்தோடும் ஆற்றின் அழகோடும் மகிழுந்துவில் பயணம் செய்வது எப்பொழுதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பெரும்பாலும் தனியாகவும் ஒரு சில நேரங்களில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடனும் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு அழகு. வெயில் காலங்களில் 20 மணி நேரமும் சூரியனின் பார்வையும் குளிர் காலங்களில் 20 மணி நேரமும் காரிருள் படர்ந்த வானமுமே நிலைத்திருக்கும். கடும் இருளோடு வெண்பனி (snow) முழுமையாக படர்ந்த சாலை,... Continue Reading →

நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப்படையெடுப்பு

1991களுக்கு பிறகான இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்தும் அமெரிக்க மையப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய துணைக்கண்டத்தின் அறிவியல் ஆய்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிபொடி வேலை செய்வதையே நோக்கமாக இருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணமே நியூட்ரினோ ஆய்வு திட்டம். எப்படி என்பதனையும் ஏன் என்பதனையும் தொடர்ச்சியாக எனது எழுத்தின் ஊடாக புரிய வைக்கும் முயற்சியே இக்கட்டுரை. இந்திய துணைக்கண்டத்தின் தேசங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு நாடாக மாறிய சூழலில் மாபெரும் அறிவியல் அறிஞர் சர்.சி.வி. ராமன் எத்தகைய அறிவியல்... Continue Reading →

நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து

இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேற செய்திருந்தாலும், நிலையான முடிவுகளை நவீன அறிவியல் உலகம் இன்னும் எட்டவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு முனைகளில் இதுதொடர்பான இயற்பியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது. அதில்... Continue Reading →

2014 – ஜெயலலிதா அம்மையார் மீதான வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியல் குறித்த பார்வை

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு முடிவை எட்டியது முதல் ஆதரவு எதிர்ப்பு என பல்வேறு குரல்கள் பிரதிபலிப்பதை பார்க்கிறோம். ஜெயலலிதா அம்மையார் அவர்களின் அரசியல் செயற்பாடுகள், தமிழக அரசின் தலைமை மூலம் செய்த நன்மை தீமைகள், காலம் காலமாக உருவாக்கப்பட்ட அரசியல் எதிரிகள், அவரது ‘கண்ணசைவில்’ கிடைக்கும் நன்மைக்காக காத்து நிற்கின்ற உதிரிக் கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, ஈழ ஆதரவு சக்திகளில் சிலர், திரைப்பட நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் நடிகர் நடிகைகள் என... Continue Reading →

மீத்தேன் திட்டமும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியமும்

இன்றைய தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் காரணமே ஒன்று முதலாளி வர்க்கத்தின் தொழில் விரிவாக்கம் அல்லது முதலாளி வர்க்கத்திற்கெனவே சேவை செய்யும் இந்திய/தமிழக அரசுகள். மக்களுக்கான அரசு என்ற நிலை அறவே அற்ற நிலையில் நமக்கான எல்லா வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் நாமே போராடி அரசுக்கு எதிரான மக்கள் ஆயுதத்தை திரட்டினால் மட்டுமே குறைந்ததேனும் நமது அடுத்த சந்ததிக்கான வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். தென் ஆப்பிரிக்காவின் டெஸ்மண்ட் டூட்டுவின் அருமையான மேற்கோள் ஒன்று இங்கே பொருத்திப் பார்க்கலாம். “கிருத்துவ... Continue Reading →

தூக்குக்கயிற்றில் நிஜம் – திருச்சி வேலுச்சாமியின் நூலை முன்வைத்து…

(பொங்குதமிழி இணையத்தில் வெளியான கட்டுரை) தமிழகத்தின் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவரான, இன்றும் எளிமையின் சிகரமாக விளங்கும் திருச்சி வேலுசாமி ஐயா அவர்கள், 'ராஜீவ் படுகொலை: தூக்குக்கயிற்றில் நிஜம்' என்ற புத்தகத்தின் வாயிலாக, ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை அவிழ்க்கப்படாதிருக்கும் பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்க முயன்றிருக்கிறார். வேலுசாமி ஐயாவின் நேரடி அனுபவமே இந்நூல் என்பதால், அவர் தனது வாதங்களை பல்வேறு பத்திரிக்கை செய்திகள்,வாழ்ந்த மனிதர்கள் மற்றும் வாழும் மனிதர்களுடன் பேசியவை பழகியவை என பல்வேறு சாட்சியங்களோடு முன்வைத்திருக்கிறார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடந்த வரலாற்று... Continue Reading →

“கடவுள் துகளா”? அல்லது “கடவுள் மறுப்பு துகளா”?

சமீப கால பத்திரிக்கை உலகமெல்லாம், “கடவுள் துகள்” கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது “கடவுள் துகளா”? அல்லது “கடவுள் மறுப்பு துகளா”? என்பது ஒருபுறம் இருக்கட்டும். நாம் வாழும் உலகைப் பற்றி நடந்த மிக முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி இது. இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் அடிப்படை புரிதல் இந்த... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑