தமிழ்த்திரையுலகில் முளைத்த செந்தாமரை

(பொங்குதமிழ் இணையத்தில் வெளியான எனது கட்டுரை) பெரும்பாலும் இன்று தமிழகத் திரைத்துறையில் இருந்து வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் பெருமளவிலான வியாபார நோக்கிலேயே எடுக்கப்படுகிறது. வணிகம் சார்ந்த துறைதான் என்றாலும் அனைத்து மக்களையும் சென்றடையும் ஊடகம் என்ற ரீதியிலாவது சமூகத்திற்கு தேவையான அல்லது சமூகத்தை சீரளிக்காத வகையிலாவது திரைப்படங்கள் இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களது எதிர்ப்பார்ப்பு. இன்றைய நவீன உலகில் மக்கள் ரசனைக்கு ஏற்றப்படங்கள், பெரும் பொருளீட்டும் திரைப்படங்களுக்கென சில சூத்திரங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். அச்சூத்திரங்களுக்கு அமைய... Continue Reading →

திராவிடமும் தமிழ்த்தேசியமும்

(இக்கட்டுரை http://www.newsalai.com இணையத்தில் வெளியானது) திராவிடக் கட்சிகள் அசைக்க முடியாமல் ஐம்பது ஆண்டுகாலம் தமிழகத்தில் கோலோச்சி இருக்கிறதென்றால் அதன் வீரியம் இன்றைய தலைமுறை வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்றால் இன்றைய திராவிட இயக்கங்களும் திராவிட இயக்கத்தலைவர்களும் மட்டும் காரணமில்லை. குறைந்தது நூறாண்டுகள் சென்றாவது அரசியல் வரலாற்றை ஆய்வு செய்யவேண்டும். நிகழ்கால அரசியல் அரங்கில் பெருமளவிலான விவாதங்கள் நடப்பது, “இன்றைய தேவை திராவிடக் கொள்கையா? தமிழ்த்தேசியக் கொள்கையா?” என்பதில்தான். திராவிடக் கட்சிகளுக்கு தனியாக திராவிடக் கொள்கையென இல்லையென்பதையும் அதன் செயற்பாடுகளும்... Continue Reading →

அம்பேத்கார் என்னும் ஓர் அதிமானுடன்

(இக்கட்டுரை பொங்குதமிழ் இணையத்தில் வெளியானது) நாம் வாழ்நாளில் எத்தனையோ திரைப்படங்களை பார்க்க நேரிடும். சில படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமாக இருக்கும். சில படங்கள் நம்முள் ஒருவித உணர்வை நம்மை அறியாமலேயே ஏற்படுத்திவிடும். சில படங்கள் நமது வாழ்க்கையை திசை மாற்றிவிடும். சில படங்கள் நமக்கான செய்தியை சொல்லிவிட்டு செல்லும். ஆம், திரைப்படம் ஒரு வலிமையான மக்கள் ஊடகம்தான். நாம் நம்மை எதனை நோக்கி செலுத்தி வந்தோமோ அவ்வழித்தடத்தை ஒட்டிய காட்சிகள் நம் கண்முன் விரியும்பொழுது பெரும்தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. அப்படி என்னுள்... Continue Reading →

கூடங்குளம் – அணுவியலும் அரசியலும்

சமீப காலமாக தமிழகத்தில் பல உரிமை போராட்டங்கள் கட்சிகளை கடந்து அரசியல் தலைவர்களின் தலைமையைக் கடந்து மக்களின் கூட்டுத் தலைமைகளின் கீழ் அல்லது பெருவாரியான மக்களின் ஆதரவுடன் நடந்து வருகிறது. அத்தகைய போராட்டங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் போராட்டம் தோல்வி பெருமாயின் மிக கொடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான போராட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம். இதுவரை காலம் அமைதி காத்துவந்த தமிழக அரசு அசுர வேகத்துடன் மத்திய அரசின் செயலை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.... Continue Reading →

திராவிடம் என்பது எங்களுக்கான அரசியல் பெயர்தான்

உலகம் முழுவதும் பொதுவுடமை சித்தாந்தம் சிதைந்து நவீன ஏகாதிப்பத்தியமும் பொருளாதார சுரண்டல்களும் பெருகிவிட்டன. இதில் கொடுமை என்னவென்றால், எந்த நாடுகளெல்லாம் பொதுவுடமை அறிஞர்களை வளர்த்தெடுத்தனவோ எந்த நாடுகளிலெல்லாம் அவ்வறிஞர்களின் கொள்கையில் முளைத்த கட்சிகளின் அரசு இருக்கிறதோ அங்கெல்லாம் கூட இன்று பொதுவுடமை தன் முழுவீச்சில் இல்லை. உலக நவீனமையமாக்கலுக்கும் பொருளாதார தேடல்களுக்கும் புவியியல் அரசியல் (Geo-politics) புவியியல் பொருளாதார (Geo-economics) கொள்கைக்கு முன்னால் லெனினியம் மார்க்சியம் அனைத்தும் ஈடுக்கொடுக்கத் தவறுகிறது என்பதனை ஐரோப்பிய நாடுகளின் நிகழ்கால அரசியல்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑