ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி: வாய்ப்புகள் என்ன? எப்படி அணுகுவது?

ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி படிக்கும் நம்மூர் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தாலும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தான பல தகவல்கள் நம்மூரின் பலத்தரப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை. வாய்ப்புகளை எப்படி தெரிந்துக் கொள்வது? யாரை அணுகுவது? எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்வது? போன்ற வினாக்களுக்கு முடிந்த அளவிற்கு தகவல்களை சேகரித்து தொகுத்துள்ளேன். ஐரோப்பிய நாடுகளில் வாழும்பொழுது கல்விக்கட்டணம் தவிர்த்து வாழ்க்கைச் செலவுதான் பெரும்பாலும் நம்முடைய செலவாக இருக்கும். அதுவும் வாரத்திற்கு 20 மணி … ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி: வாய்ப்புகள் என்ன? எப்படி அணுகுவது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அண்ணல் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தைக் கிழித்தெறியும் பாஜகவின் அரசியல்!

மொழி வழி மாநிலங்கள் உருவாக்க காங்கிரஸ் முதலில் தயங்கிய போதும், அதன் சாத்தியக்கூறுகள், பலவீனங்கள் குறித்து ஆராய அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களால் அமைக்கப்பட்ட தார் குழுவிற்கு (Dar Commission), 1948 அக்டோபர் மாதம் அண்ணல் அம்பேத்கார் வழங்கிய பரிந்துரையில், மொழி வழி மாநிலங்களின் தேவையை ஆதரித்ததோடு, அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கார் பரிந்துரைத்திருந்தார். (ஆதாரம்: http://www.allsubjectjournal.com/download/2609/3-3-113-456.pdf) அண்ணல் அம்பேத்காரை பொறுத்தவரை, "ஒரு மொழி, ஒரு … அண்ணல் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தைக் கிழித்தெறியும் பாஜகவின் அரசியல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ் வழிக்கல்வியும் அப்பா அம்மாக்களின் பெரும்பங்கும்!

(2016 ஜூன் மாதம் எழுதப்பட்டது) எங்களது (விஜய் அசோகன்-இளவரசி வேலண்டினா) மூத்த மகன் கவின் திலீபனுக்கு இதோ ஆறு வயது நெருங்கப்போகிறது. அவரை நாங்கள் இன்னும் பள்ளிக்கூடம் சேர்க்கவில்லை. தாய் மொழி வழிக்கல்வி, அரசு பள்ளி என்பதில் நாங்கள் இருவரும் தீர்க்கமாக இருக்கிறோம். அதனினும் தீர்க்கமாக, பெரும் பொருட்செல்வு செய்து, இன்றைய மன அழுத்தம் தரும் தனியார் பள்ளிக்கூட பாட முறைகளுக்குள் எங்களது குழந்தைகளை சிக்க வைத்து அவர்கள் வாழ்வை சிதைக்க வைக்க நாங்கள் துளியும் விரும்பவில்லை. … தமிழ் வழிக்கல்வியும் அப்பா அம்மாக்களின் பெரும்பங்கும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.